புதன், 20 செப்டம்பர், 2017

அன்பின் சக்தி...

அன்பின் மகளே
அன்பின் மகளே..

தப்பிப் பிறந்த
தேவதை நீயே...

அம்மையும்
அப்பனும்
கருவிகள்
மட்டும்...

சேயெனப்பிறந்து
தாயெனச்
சிறந்தவள்..

வான் மகள் நீயே..
எமை
காத்திடுவாயே..

கருவறை
வளர்ந்த
கண்ணின் மணியே...
என்
இல்லத்தில்
பூத்த
புதுமலர் தாயே...

சிறுகை அளாவிய
அன்னம்
இனிக்கும்...
உன்னைத்
தூக்கிச் சுமந்ததால்
நெஞ்சம்
குதிக்கும்.

அம்பாரி
வேளையில்
யானையாய்
தவழ்ந்தேன்...
அப்பா
என்கையில்
மறுபடிப்
பிறந்தேன்...

உன்
சிறுநடை
வேளையில்
நான்
களிநடம்
புரிந்தேன்...
உன்
சிற்றாடை
அசைய
நான்
சில்லெனப்
பூத்தேன்..

பெற்றவர்க்கே
நீ
பெற்றவள்
ஆனாய்...
பற்றில்லா
வாழ்வின்
உற்றவள்
ஆனாய்..

அம்மையே..
தாயே...
அருமைப்
பிள்ளையே..

பிறந்த நாள்
உனக்கு..

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

வீட்டுச்சோறும் ஊர்க்குழம்பும்..

இப்படி ஓர் தலைப்பு என் வலைப்பூவில் ஆச்சர்யம் தான் எனக்கே.

அது  ஆலைத்தொழிலாளர்களின் காலனி வீடுகளின் காலம்...

வியாழன், 14 செப்டம்பர், 2017

பொறுத்தருள்க...

அழகே..அழகே
அத்தனை அழகே...
சித்தனை
பித்தனாய்
ஆக்கிவிட்டு
எத்தனை
சிரிப்படி
உன் அழகு...

புதன், 5 ஜூலை, 2017

வார்த்தைகளிடம் வாழ்க்கை

வார்த்தைகளிடம்
விடப்பட்ட
வாழ்க்கை..

ஆதியில்
சொற்கள்
வேதமாயிருந்தன.

பாடலென
காதலென
பரிவென
வர்ணங்களின்
பளபளப்பில்
மின்னித்திரிந்தன...

ஊடலின்
பொழுதுகளில்
பேசிய
வார்த்தைகளே
தூதுவர்களாய்
துணை நின்றன்..

கூடலின்
சாமங்களில்
தலையணைக்குள்
சிக்கி
தத்தளித்தன...

நீண்ட இரவின்
இருளில்
நட்சத்திரங்களாய்
இருந்தவை
அவைகள்..

இதயம்
வாயென
இரண்டு
பிறப்பிடங்கள்
இருந்தாலும்
கண்களுக்கும்
அதை
பிரசவிக்கும்
பேறிருந்தன..

கவிதைகளென
திரிந்த
காலங்கள்
சொற்களின்
பொற்காலம்..

வார்த்தைகள்
முகவரியாய்
இருந்ததும்
உண்டு...

சொல்லா வார்த்தைகள்
தொண்டைக்குழிக்குள்
சிக்கி
மண்டைப்பரப்பெங்கும்
வெடிப்பது
அதன்
வேடிக்கை..

கெஞ்சுதல்
மிஞ்சுதல்
எல்லாம்
வார்த்தைளால்
வடிப்பவை.

கிரகிக்க
யாருமின்றி
எதிரொலி
ஆகும்போது
வார்த்தைகள்
பிறழ்ந்து
போகின்றன.

செவிகளை
மூடும்போது
மொழி
மனமுடைகிறது...

வார்த்தைகளின்
அழுகை..
ஆகப்பெரிய
வருத்தம்..

அற்றநீர்க்
குளத்தினில்
அமிழும்
வார்த்தைகள்
செத்துப்போவதே
இல்லை...

ஒற்றைத்துளி
நீருக்கு
எப்போதும்
ஜனிக்கும்...
திங்கள், 27 மார்ச், 2017

காணொளியில் சின்னவள் கவிதை..

சின்னவள் குறித்த உற்சாகம் மீண்டும் என்னை பிறப்பித்து இருக்கிறது..
யுகங்களின் வலிகளை..துயரங்களை,வரலாற்றை எல்லாம் எழுதிப்போன முன்னேர்களின் பின்னே பனை நுங்கு மட்டையின் வண்டியென ஓட்டிப்போகிறேன்.

ஒரு கிலோ காதல்...

பி.ஜி நாயுடுவில்
கொஞ்சம் இனிப்பு...

வெள்ளி, 24 மார்ச், 2017

சுழன்றும் ஏர்...

தனக்கென தான்ய வயல்கள் இல்லாத நாடு அழிந்துவிடும் என்கிறான் மாவீரன் அலெக்ஸாண்டர்..

செவ்வாய், 7 மார்ச், 2017

அன்னையர் தினம்?

முதல்நாளே நெல்லை எடுத்து உரலில் போட்டு குத்த ஆரம்பித்து விடுவார்கள்..

ஞாயிறு, 5 மார்ச், 2017

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

திங்கள், 13 பிப்ரவரி, 2017

நந்தவன நாள்கள்..

ஒரு காதல் கவிதையேனும்
எழுதிவிடவேண்டுமென்ற
பேராவலில் தான்
எத்தனிக்கிறேன்..

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

நான் வரவேற்கிறேன்..

அவர் முதல்வராக வரவேண்டாம் எனச்சொல்ல ஆயிரம் காரணம் உங்களிடம் இருக்கலாம்...

வியாழன், 19 ஜனவரி, 2017

இடையில ரெண்டு கதை..

1.ரொம்ப முன்னாடி..

முன்னாடி ஒரு காலத்துல..
ஆகா..ஆரம்பிச்சுட்டாண்டான்னு கிளம்பிறாதீக...

செவ்வாய், 17 ஜனவரி, 2017

கண்ணிலே...கலைவண்ணம் கண்டார்..பிறந்து வளர்ந்ததெல்லாம்..இதோ இந்த சின்ன மாவட்டத்தில் தான்..

பல கழுதை வயசும் ஆயிடுச்சு..

வெள்ளி, 13 ஜனவரி, 2017

விசில் பொங்கல்..

ஆராயிப் பாட்டி
ஆவாரம்பூ
கட்டொன்று
ஐந்துரூபாயென
விற்றுக்கொண்டிருந்தார்..

செவ்வாய், 10 ஜனவரி, 2017

வலையில் விரியும் கதைப்பூக்கள்

அன்பின் சக்திக்கு..
வலைப்பூ உலகில் வந்து வருடமானாலும் என் தளம் தாண்டி மற்ற தளங்களில் அதிகம் உலவியதில்லை..

புதன், 4 ஜனவரி, 2017

செவ்வாய், 3 ஜனவரி, 2017

உயிரிருந்தும்...

அன்பின் சக்திக்கு,

புத்தாண்டு வாழ்த்துகள்.
வாழ்த்துகள் யாவும் இங்கே சம்பிரதாயத்துக்குத்தான்.