திங்கள், 17 அக்டோபர், 2016

ஊழ்வினை வந்து...


மறுதீர்ப்பில்
குற்றநிரூபனமிலாத
வணிகனாய்



நான்மாடக்கூடல்
நாட்கள் கழிந்து
கிழட்டுரு எய்திய
கோவலன்
பத்தினி சூழ்
புகார்புகும் காலை.

கோரையோடிய விரிசுவர் இல்லில்
பூத்துக்குலுங்கும்
நெடுநாள் வாசனை.

கண்ணகிப்பாட்டியின்
கண்ணீரோடிய தாரைகள் தடவும் கிழவனின் விரல்கள் சுருக்கம் விரிகின்றன..

தூசிகள் தட்டி
சுருள்பாய் விரித்து
கிழவனின் கரங்கள்பின்னி தலைசாய்க்கிறாள்..

கோவலக்கிழவன்
விழிகள்
திறக்கிறான்...
துவராடை நனைக்க
பெண்ணொருத்தி
மகள் பிடித்து
பார்வை மறைகிறாள்..

உத்தரத்து
நிறைசூழ் பல்லியொன்று
எச்சமடக்கி அவன் உதடு கடக்கிறது.









5 கருத்துகள்:

  1. புரியலையே......விளக்கவுரை தேவை

    பதிலளிநீக்கு
  2. அய்யோ தமிழா,எனக்கும் தான் புரியல..
    ஆனந்த விகடனுக்கு இப்படி அனுப்புனாத்தான் போடுவாங்கன்னு நண்பர் சொன்னார்...அனுப்புனேன்...அவங்க போனவாரம் கவிதைப் பக்கத்தையே தூக்கிட்டாங்க..

    ஆனா...உங்களுக்கு ஏதாச்சும் புரியும்னு நினச்சேன்...கொஞ்சம் கஸ்டப்பட்டு சொல்லுங்களேன்..புரியிறதை...

    பதிலளிநீக்கு
  3. இதை இல்பொருள் உவமை என்பது புலவர் வழக்கு. (இல்லாததை இருப்பதாகக் கற்பித்துக் கொண்டு எழுதுவது)
    ஒருவேளை தப்பித்து வந்த கோவலனும் கண்ணகியும் அவ்வளவு நாள் மதுரையிலேயே இருந்திருக்க வேண்டிய அவசியமென்ன? சரி, வயதாகி -விரல் சுருங்கி- வரும்போது, அவன் மகள் மணிமேகலை மட்டும்(?) சிறுபிள்ளையாக இருப்பாளோ? கப்பல் வணிகம் செய்த புகாரின் பணக்காரக் குடும்பம் ஏழையானதேன்? இப்படிச் சில கேள்வி வந்து இடிக்கிறதே கவிஞரே! மற்றபடி விகடனுக்கு “ஏற்ற” கவிதைதான்.. இதை இருண்மை என்று நவீன கவிஞர் சொல்கிறார்கள் (எவ்வளவுக்குப் புரியலையோ அவ்வளவுக்கு சிறந்த கவிதையாம்!) நமக்குப் புரிஞ்சது இவ்ளோ தான். நீங்க யாருக்காகவும் எழுத வேண்டாம், உங்களுக்காகவும் எங்களுக்காகவும் எழுதுமய்யா...!

    பதிலளிநீக்கு
  4. மறுதீர்ப்பில் வெளியாகி வயதாகி வாழும் கோவலன் கனவில் சின்னக் குழந்தையை அழைத்துக் கொண்டு பெண்ணொருத்தி மறைகிறாள்.... என்பதாய் புரிகிறது.. அந்தப் பெண் யார்...? மாதவியா...?
    குழந்தை மணிமேகலையா...?

    பதிலளிநீக்கு