வியாழன், 8 செப்டம்பர், 2016

கிடந்தாய்...வாழி..

காவேரி
தென்பெண்ணை
பாலாறு..
நதிகளில்
இல்லடா
கோளாறு..
கோடுகள்
போட்டு
நாம்
கிழித்தோம்..
கொட்டும்
அருவியும்
பூட்டி வச்சான்.
வெள்ளமா
பொங்குனா
திட்டிவச்சோம்..
பள்ளமா
காய்கையில்
தள்ளிவச்சோம்...
மணலெல்லாம்
அள்ளிட்டு
கொள்ளிவச்சோம்..
மனுஷங்க
எதைடா
விட்டு வச்சோம்...
ஆற்றுக்கும்
சோற்றுக்கும்
போராட்டம்...
நடுவுல
தேசிய நீரோட்டம்.
இந்தியா
நம்மோட
தாய்நாடாம்...
எல்லாரும்
என் கூடப்பிறந்தவனாம்.
தண்ணிதான்
கேட்டோம்..
தாலியறுக்கிறான்.
தட்டிகேட்பவன்
வானத்துல
பறக்குறான்.
அங்க எல்லாரும்
ஒன்னாகி
தரையில புரளுறான்..
இவன்
டாஸ்மாக்
கடையில
பீருக்கு
அழுகுறான்.
தலைவனின்
படத்தை
பாலால
கழுவுறான்.
விதிவந்து
சாவதற்குள்...
வீதிக்கு
இறங்காவிட்டால்..
நதிமட்டும்
இல்லையடா..
நாதியத்துப்போவோம்
நாம்...






















6 கருத்துகள்:

  1. உண்மைதான் உணராத மக்களை வைத்துக்கொண்டு என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  2. மணல் இல்லாத ஆறு மலடி அல்லவா? அது இந்த மண்ணாங்கட்டிகளுக்கு புரியலையே..

    பதிலளிநீக்கு
  3. //மனுஷங்க
    எதைடா
    விட்டு வச்சோம்...//

    அதான்.... தொடர்ந்து ஆற்று மணலை சுரண்டி எடுத்துக் கொண்டே இருக்கிறோம். வரும்போது சேமிப்பதில்லை. அடுத்தவனை நம்பியே புலம்பிக்கொண்டிருக்கிறோம்....

    பதிலளிநீக்கு
  4. உன்மைதான் செல்வா. நாம் எதைத்தான் விட்டு வைத்தோம்...

    பதிலளிநீக்கு
  5. Thiru. Meera.Selvakumar Ayya, Azhagana pulambalil nenjam kodhikkiradhu en makkalai ninaithu! Endru thaniyum indha vetkakedu?

    பதிலளிநீக்கு